Monday, September 2, 2013
யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இளைஞர்களுடன் பாடசாலை மாணவிகள் உல்லாசம்? யாழில் அதிர்ச்சி
பாடசாலை மாணவிகளின் எதிர்காலத்தையும் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தையும் திட்டமிட்டு சீரழிக்கும் நடவடிக்கைகள் யாழ். கோட்டைப் பகுதியில் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் மூலம் பலமுறைகள் சுட்டிக்காட்டி காட்டப்பட்டிருந்தும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கைகளும் இது தொடர்பான அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் பாடசாலை மாணவிகள் சுமார் 10 பேர் வரை (14 வயது தொடக்கம் 17 வயது வரையிலான) தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக பெற்றவர்களை ஏமாற்றி விட்டு சில இளைஞர்களுடன் கோட்டைப் பகுதியில் உள்ள மறை விடங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் பாடசாலை மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டும் யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடனும் இம் மாணவிகளை அங்கிருந்து
வெளியேற்றுவதற்கு 5 பேர் கொண்ட ஊடகவியலாளர் குழு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்ததோடு, மாணவர்களுக்கு அவ்விடங்களுக்கு வருவதில் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறி அவர்களை அவரவர் வீடுகளுக்கும் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து தம்முடன் சேர்ந்து வந்த மாணவிகளை அனுப்பி வைப்பதற்கு அவர்கள் யார் எனவும் அப்பெண்களே தம்முடன் வரத்தயராக இருந்தநிலையில், அவர்களைத் தடுக்க அவர்கள் யாரெனவும் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்ட அங்கிருந்து இளைஞர் குழு உடனடியாக தமக்கு ஆதரவு தேடும் நோக்கில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட தமது சகபாடிகளை அழைத்து ஊடகவியலாளர்களின் மேல் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தனர்.
இவ்வேளை மாணவியொருவரை அழைத்து வந்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 18 வயதான இளைஞன் ஒருவன், ஊடகவியலாளர்களினால் அச்சேட்டைகள் தடுத்து நிறுத்தப்பட்டதன் ஆத்திரத்தில் சிறிய கத்தியொன்றை எடுத்து ஊடகவியலாளர்களைத் தாக்கமுற்பட்டான்.
இதனையடுத்து கோட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, சுற்றுலாவுக்கென அங்கு வருகை தந்திருந்த வெளிநாட்டவர்களும் இச்சம்பவத்தை கண்ணுற்று அச்சத்தில் அங்கிருந்து வெளியேற முற்பட்டனர்.
இவ் இளைஞர்கள் அவ்வேளையில் மது போதையிலிருந்ததோடு, போதைப் பொருட்களையும் பாவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இச் சமபவத்திற்கு முன்பாக யாழ். வேம்படி வீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண கிளைக் காரியாலயத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற தேர்தல் கலந்துரையாடல் ஒன்றில் செய்தி சேகரிக்கச் சென்று காரியாலயம் முன்பாக தரித்து நின்ற ஊடகவியலாளர்களை இளைஞர் குழுவொன்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.please visit www.yarlminnal.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment