https://www.facebook.com/pages/yarlminnalcom/154587057958075?ref=br_tf

Monday, September 16, 2013

பலாத்காரத்திற்கு உட்படுத்திய வீடியோவை காண்பித்து சிறுமியை கொடுமைப்படுத்திய கயவர்கள்

ராஜஸ்தானில் சிறுமி ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டார். இக்கும்பல் சிறுமியை பலாத்காரம் செய்ததை விடியோவாக பதிவு செய்து அச்சிறுமியை தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் 3 பேர் கொண்ட கும்பலால் நிவாரு ரோட் என்னும் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டார்.
இக்கும்பல் சிறுமியை பலாத்காரம் செய்ததை கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்து, அச்சிறுமியை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியும் வந்துள்ளனர்.
தங்களது நிபந்தனைகளுக்கு அச்சிறுமி உடன்படாவிட்டால், அவர்கள் வைத்திருந்த விடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்வோமென அக்கும்பல் மிரட்டியதால் அச்சிறுமி மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த அவலத்தை அச்சிறுமி அவரது தாயிடம் கூற, அவர் உடனடியாக அந்த மூவர் மீதும் பொலிசில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து பொலிசார் தலைமறைவாகியுள்ள அந்த மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment