https://www.facebook.com/pages/yarlminnalcom/154587057958075?ref=br_tf

Monday, September 16, 2013

நாசா விஞ்ஞானியின் முயற்சியால் ஜோடி சேரும் ஜெயப்பிரகாஷ்- லட்சுமி ராமகிருஷ்ணன் ஜோடி

விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானி ஒருவர் தமிழ் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர் பெயர் பார்த்திபன். விஞ்ஞானியாக பணியாற்றி வரும் இவருக்கு இப்போது சினிமா மேல் மோகம் வந்துள்ளது. இதனால் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள களத்தில் குதித்துள்ளார். நாசா விஞ்ஞானியான பார்த்திபன் நடிக்கப் போகும் படத்திற்கு ‘விஞ்ஞானி’ என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நீண்ட நாட்களாக சினிமா உலகில் இருந்து காணாமல் போன நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளார். இப்படத்தை ‘ரசிக்கும் சீமானே’ படத்தை இயக்கிய வித்யாதரன் இயக்க உள்ளார். அறிவியல் சம்பந்தமான தகவல்களை சொல்ல வரும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைக்கின்றார். மேலும் ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேருகின்றனர். இவர்கள் மீரா ஜாஸ்மினுக்கு தாய், தந்தையராக நடிக்கின்றனர். சமீபத்தில் இருவரும் ஜோடியாக வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டனர். இந்த கிசுகிசுவை மெய்யாக்குவதை போலவே மீண்டும் இவர்கள் திரையில் ஒன்று சேர்வதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment